தன் தம்பியின் எதிர் காலம் வீணாகக் கூடாது என்ற காரணத்துக்காக வில்லனிடம் அடிமை போல் வாழ்கிறார் நாயகன். ஒரு கட்டத்தில் தம்பியையும் நண்பனையும் இழக்கும் போது வில்லனை நாயகன் எப்படி பழி வாங்குகிறார் என்பது மீதிக் கதை.
‘டைட்டில் ரோலில் நடித்துள்ள ஹரிகுமார் காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், நடனம் என்று எல்லா ஏரியாக்களிலும் பட்டையைக் கிளப்புகிறார். அருந்ததிக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் பாடலுக்கு பயன்படுகிறார். சூரியின் காமெடியில் நகைச் சுவை அதிகம் என்று சொல்ல முடியாது. பன்றியைத் துரத்தும் காட்சியிலிருந்தே பயமுறுத்த ஆரம்பித்து விடுகிறார் ரவிசங்கர். ஜான் பீட்டர் இசையில் ‘முரட்டு மச்சான்’ பாடல் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. ஆக்ஷன் கதையில் சென்டிமென்ட் கலந்து கமர்ஷியல் படம் கொடுத்துள்ளார் இயக்குனர் ஞானம்.