கோடை மழை



மண்வாசனை கலந்த பாசமலர்

நாயகன் கண்ணன் மிலிட்டரியில் இருந்து விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்துக்கு வருகிறார். அவருடைய நண்பன் திருட்டுத் தொழிலைச் செய்து வருகிறார். ஆனால் கண்ணனிடம் அதை மறைத்துவிடுகிறார். அதே ஊரில் இன்ஸ்பெக்டரான களஞ்சியத்தின் தங்கை பிரியங்காவை காதலிக்கிறார் கண்ணன். ஆரம்பத்தில் கண்ணனுக்கு எதிராக இருக்கும் அண்ணன், தங்கையின் நலம் கருதி திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார். அந்த சமயத்தில் ஒரு வழக்கில் நாயகனின் நண்பன் பலிகடாவாகிறார். தன் நண்பனின் காதலுக்கு இன்ஸ்பெக்டர்தான் காரணம் என்று நினைக்கும் நாயகன் இன்ஸ்பெக்டரை அவமானப்படுத்துகிறார். அதன் பிறகு கண்ணன், ஸ்ரீபிரியங்கா வாழ்க்கையில் இணைந்தார்களா இல்லையா என்பதே மீதி படம்.



நாயகனாக நடித்திருக்கும் கண்ணன் புதுமுகமாக இருந்தாலும் ஆர்வத்துடன் நடித்திருக்கிறார். ஸ்ரீபிரியங்காவின் நடிப்பு நன்று. இன்ஸ்பெக்டர் கெட்டப்பில் பாசமும் ஆக்‌ஷனும் கலந்து மிரட்டியிருக்கிறார் களஞ்சியம். காமெடியில் கலக்கியிருக்கிறார் இமான் அண்ணாச்சி. சாம்பசிவம் - பவன் இசையில் வைரமுத்துவின் பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. மிகச் சிறப்பான கேமரா கோணங்களுடன் கிராமத்து மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் கதிரவன்.