மறுக்கவே மாட்டேன்! மடோனா சபதம்!!



டபுள் ஹேப்பியில் இருக்கிறார் மடோனா செபாஸ்டியன். கடந்த ஆண்டு மலையாளத்தில் ‘பிரேமம்’ ப்ளாக்பஸ்டர் ஹிட், இந்த ஆண்டு தமிழில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் அதகள வெற்றி என்று அடுத்தடுத்து ஹிட் ரேட்டில் உயர்ந்து கொண்டே போகிறார். ஃபேஸ்புக்கில் பல்லாயிரக் கணக்கில் ஃபாலோயர்ஸ் இவருக்கு ‘லைக்’குகளாக அள்ளிக் குவித்துக் கொண் டிருக்க, கா.க.போ யாழினி, அவருடைய டிரேட்மார்க் புன்னகையோடு பேட்டிக்கு தயாரானார்.



“மலையாளத்தில் ‘பிரேமம்’ செலினா, தமிழில் ‘கா.க.போ’ யாழினி ஆனது எப்படி?”
“இயக்குநர் நலன் குமாரசாமியும், ‘பிரேமம்’ எடுத்த அல்போன்ஸ் புத்திரனும் ஷார்ட்ஃபிலிம் மேட்ஸ். அந்த அடிப்படையில்தான் ‘பிரேமம்’ நடிச்சிக்கிட்டிருக்கறப்பவே தமிழுக்கு வாங்கன்னு கூப்பிட்டாரு நலன். அல்போன்ஸும், ‘நல்ல சான்ஸ். மிஸ் பண்ணிடாதே’ன்னு அனுப்பி வெச்சாரு. தமிழில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக பிரேமம் படத்தின் டைட்டில் கார்டில் ‘கா.க.போ’ டீமுக்கு நன்றி தெரிவிச்சாரு அல்போன்ஸ்.”

“கதை கேட்டுட்டுதான் ஓக்கே பண்ணீங்களா?”
“இது ‘மை டியர் டெஸ்பரட்டோ’னு ஒரு கொரியன் படத்தோட ரீமேக். அந்தப் படத்தை எனக்கு ஸ்க்ரீன் பண்ணி காமிச்சாங்க. படம் பார்த்து உருகிட்டேன். அந்தப் படத்தை அப்படியே எடுக்காம கதையோட சாராம்சத்தை மட்டும் எடுத்துக்கிட்டு நம்மூருக்கு ஏத்த மாதிரி ரொம்ப அழகா மாத்தியெடுத்திருக்காரு நலன். எனக்கு இப்போ கிடைக்கிற பாராட்டெல்லாம் அவரையே சாரும்.”

“எங்க ஆளு விஜய் சேதுபதி எப்படி?”
“மலையாளத்தில் ஹிட் ஹீரோ நிவின்பாலியோடு நடிச்சேன். அவருக்கு அங்கே இருக்குற இமேஜ் இங்கே விஜய்சேதுபதிக்கு இருக்கு. அடுத்தடுத்து அந்தந்த இண்டஸ்ட்ரிகளோட பெரிய ஹீரோக்களோடு அறிமுகம் என்பது எனக்கு ரொம்ப பெருமை. சேதுபதியோட டயலாக் டெலிவரி... சான்ஸே இல்லை. நான் ஸ்பாட்டில் தமிழ் பேச தடுமாறினப்போ ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருந்தாரு. ஷூட்டிங் பிரேக்கில் அவரோட சினிமா பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ண சான்ஸ் கிடைச்சது. ஹீரோ, ஹீரோயினுக்கு வேவ் லெங்த், ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கணும்கிற சினிமா தியரியை கத்துக்கிட்டேன். இதையெல்லாம் இன்ஸ்டிட்யூட் போய்கூட கத்துக்க முடியாது.”

“தமிழில் ஷைன் ஆவீங்கன்னு நம்பிக்கை இருக்கா?”
“நதியா முதல் நஸ்ரியா வரை சேச்சிகளை வாழவைச்ச தமிழகம், மடோனாவை மட்டும் மறந்துடுமா? இங்கே படப்பிடிப்புக்காக கழித்த ஐம்பது நாட்கள் அவ்வளவு ஈஸியா என்னை கடந்து போயிடாது. தமிழர்களோட கலாச்சாரம், உணவு, மொழி எல்லாமே ரொம்ப பிடிச்சிருக்கு.”

“நீங்க நடிச்ச ரெண்டு படமும் கமர்ஷியல் சக்சஸ்னாலும், ஒரு மாதிரி ஆஃப் பீட் மூவி. இதே டிரெண்டை கன்டினியூ பண்ணப் போறீங்களா?”
“நோ நோ. வழக்கமாக ஸ்டீரியோடைப் ரோல்களில் நடிக்க மாட்டேன்னு நடிகைங்க சொல்லுவாங்க. ஆனா அப்படிப்பட்ட கேரக்டர்களைத்தான் எடுத்து நடிப்பாங்க. என்னைத்தேடி தரை லோக்கல் மசாலாப் படம் வந்தாலும் வேணாம்னெல்லாம் மறுக்க மாட்டேன். எப்பவுமே ‘பிரேமம்’ கிடைக்காது என்பதுதான் யதார்த்தம். ஐ வான்ட் டு பி இன் சினிமா. ஸோ, ஐ வில் நெவர் ஸே நோ.”

“நெக்ஸ்ட்?”
“அவசரமா கமிட் ஆகமாட்டேன். இப்போதான் கதைகள் கேட்க ஆரம்பிச்சிருக்கேன். மலையாளத்தில் திலீப்போட ‘கிங் லயர்’. ‘பிரேமம்’ வேற தெலுங்கில் மாட்லாடப் போவுது.”

“சரி. உங்க பேக்கிரவுண்டு பத்தியே சொல்லலையே?”
“கொச்சி பக்கமா கொலன்சேரின்னு ஒரு ஊரு. எப்பவும் சும்மா ஜில்லுன்னு இருக்கும். பி.காம் டிகிரி ஹோல்டர். சின்ன வயசுலேருந்து இசை மீது பயங்கர இன்ட்ரெஸ்ட். படிப்போடு சேர்ந்து மியூசிக்கும் கத்துக்கிட்டேன். தீபக்தேவ், கோபிசுந்தர் இசையமைத்த பாடல்களில் பின்னணி பாடியிருக்கேன். சூர்யா டிவியில் - உங்க சன் க்ரூப்புதான் - காம்பியரிங் பண்ணியிருக்கேன். அதைப் பார்த்துட்டுதான் அல்போன்ஸ் புத்திரன் சினிமாவில் நடிக்க கூப்பிட்டாரு. என்னை ஒரு பாடகின்னு நெனைச்சிக்கிட்டிருந்தேன். நஸ்ரியாவை இன்டிரொடியூஸ் பண்ண டைரக்டருக்கு என்னை நடிகையா தெரிஞ்சிருக்கு. ஸோ வாட்? ஐ லவ் சினிமா, ஐ என்ஜாய் சினிமா.”

- சுரேஷ் ராஜா