டேட்டிங் புட்டுக்கிச்சி!
மாஜி ஹீரோயின் ரதியின் மகன் தனுஜும், கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷராவும் நீண்டநாள் நண்பர்கள் (கமலும், ரதியும்தான் ‘ஏக் தூஜே கேலியே’ ஜோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது). அவ்வப்போது இருவரும் டேட்டிங் போவதும் உண்டு. அக்ஷரா அறிமுகமான ‘ஷமிதாப்’, தனுஜ் அறிமுகமான ‘லவ் யூ சானியோ’ இரண்டுமே தோல்வி அடைந்ததை அடுத்து, அவர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வருவதாகத் தெரியவில்லை. அதிர்ச்சியடைந்த சரிகாவும், ரதியும் இவர்களை அழைத்து, “வேலையில் முனைப்பாக இருங்கள். டேட்டிங் போவதற்கெல்லாம் இன்னும் நிறைய காலம் இருக்கிறது” என்று எச்சரித்திருக்கின்றனர். இப்போதைக்கு தங்கள் டேட்டிங்குக்கு பிரேக்கப் கொடுத்துவிட்டு, வாய்ப்புக்காக இருவரும் தனித்தனியாக இயக்குநர்களின் வீட்டுக் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
- ஒய்2கே
|