ரீடர்ஸ் கிளாப்ஸ்!



ஜிங்கா கோல்டு! சிக்ஸர் போடு!!

கவர்ச்சிப் படங்கள் கலக்கல் என்றால், அதற்குரிய உங்கள் கமெண்டுகள் யப்பா சும்மா பின்னியெடுக்குது.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

சரோஜாதேவியின் ‘பழம்’ ஸ்பெஷல் பதில்கள், முக்கனியையும் சுவைத்த உணர்வைத் தந்தன.
- ரமேஷ், கொளத்தூர்.



சினிமாத்துறையில் ஒரு கவர்ச்சிராணியாக மட்டுமின்றி பலரை தன் உழைப்பால் வாழவைத்த வள்ளலாகவும் வாழ்ந்த சில்க் ஸ்மிதாவைப் பற்றிய மீரானின் வர்ணனைகள் மனதை நெகிழவைத்து விட்டன.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

இதுவரை என்னை யாரும் காதலிச்சது கிடையாது, எனக்கு ஆண் நண்பர்களும் கிடையாது என்று சொல்லும் ஹன்சிகா நிஜமாகவே ஒண்ணும் தெரியாத பாப்பாதான்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

‘நின்னு பேசும் ஜிங்கா கோல்டு’ என்று நடுப்பக்கத்தில் உங்கள் ரெகுலர் விளம்பரதாரருக்கு விளம்பரம் செய்யும் டெக்னிக் ஆகட்டும், அடுத்த வரியிலேயே ‘பால் வகையா மாட்டினா சிக்ஸர் போடு’ என்று டி20 உலகக்கோப்பையை வரவேற்கும் சாமர்த்தியமாகட்டும், வண்ணத்திரையின் தொழில்நேர்த்தியே தனிதான்.
- வேணுகோபால், அறந்தாங்கி.

உத்தரகாண்ட் ஸ்வீட் சாக்‌ஷியின் புளோஅப்புகளை தொடர்ச்சியாக போடும்போதே நினைத்தேன், விலாவாரியான பேட்டி விரைவில் வருமென்று. எங்கள் எதிர்பார்ப்புகளை அறிந்து பூர்த்தி செய்வதற்கு நன்றி.
- குந்தவை, தஞ்சாவூர்.

பின்னட்டையில் ‘பெட்ரூம் சீனில் ராய்லட்சுமி’ என்று அறிவித்துவிட்டு உள்ளே மேட்டர் ஒன்றும் மெச்சிக் கொள்ளும்படி இல்லையே? பிட்டு படத்துக்கு போஸ்டர் ஒட்டி ஏமாற்றும் தியேட்டர்காரர்கள் மாதிரி ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். வன்மையான கண்டனம்.
- ராகுல், காரமடை.