படச்சுருளை பெட்டியில் வைத்து அனுப்புவார்கள். இசை வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழையே பெட்டியில் வைத்து அனுப்பியிருக்கிறார் ‘களவாணி’ இயக்குநர் சற்குணம். இப்போது அவர், இயக்கியுள்ள ‘வாகை சூட வா’ படத்துக்காகவே இந்த ஏற்பாடு.
‘‘இது ஒரு பீரியட் பிலிம். அதனால் பழைய டிரங்குப் பெட்டி, பாட்டுப்புத்தகம், சாமி படம், ஒட்டடை, கரப்பான் பூச்சி ஆகியவற்றை வைத்து அழைப்பிதழ் தயாரித்தோம். ரொம்ப நாளான பெட்டி என்பதைக் காட்டவே ஒட்டடையும் கரப்பான் பூச்சியும். அழைப்பிதழுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலுள்ள பாட்டுப் புத்தகத்தைப் பார்த்த ஒரு விநியோகஸ்தர், ‘ஒரு காலத்தில் பாட்டுப் புத்தகத்துக்கே ரைட்ஸ் இருந்தது’ என்று நினைவு கூர்ந்தார். நினைவைக் கிளற வைத்ததுதான் எங்களது வெற்றி’’ என்கிறார் இயக்குநர் சற்குணம்.
நெல்பா