ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                   ‘கற்றது களவு, ‘அலிபாபா’ படங்களுக்கு பிறகு கிருஷ்ணா நடிக்கும் படம் ‘கழுகு’. இதில் நாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார். பட்டியல் சேகரின் டாக்கிங் டைம்ஸ் மூவிஸ், அருண் பிலிம் எண்டர்டைனர்ஸ் அருண் தூளி இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் சத்யசிவாவிடம் கேட்டோம்.

“காதல் கதைகளில்  இது முற்றிலும் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும்.

 தன் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு நடித்திருக்கும் கிருஷ்ணாவுக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். கருணாஸ்,  தம்பிராமையா இருவரும் நகைச்சுவை கலந்த கேரக்டரில் கலக்கியுள்ளார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்...’ உள்ளிட்ட பாடல்கள் தனித்துவமாக இருக்கும்.” என்றார்.
 எஸ்