தேநீர் விடுதி
தேநீர்விடுதியை காதல் தூதுவனாக சித்தரித் திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.குமரன். கிராமத்தில் மைக்செட் மற்றும் பந்தல் காண்டிராக்டர் வேலை செய்துகொண்டு இன்றைய கதாநாயகர்களுக்கான சகல சம்பத்துகளுடன் வலம் வருகிறார் நாயகன் ஆதித்.
அந்த ஊரிலுள்ள பெரிய மனிதர்களில் ஒருவரும் அரசு அதிகாரியுமான பிரபாகரின் மகள் ரேஷ்மி மீது காதல் கொள்கிறார் ஆதித். ஒருகட்டத்தில் ரேஷ்மிக்கும் காதல் வந்துவிடுகிறது. அரசாங்க சட்டதிட்டங்களை மட்டுமின்றி குடும்பச் சட்டதிட்டங்களையும் கடுமையாகக் கடைபிடிக்கும் அதிகாரி பிரபாகர் இந்தக் காதலை எப்படி ஏற்றுக்கொள்வார்? என்பதற்கான விடைதான் படம்.
யாருங்க அந்த பிரபாகர்? கொடுத்த வேடத்தை அட்சரம்பிசகாமல் நடித்து பாராட்டை பெற்று விடுகிறார். ஆதித்துக்கும் ரேஷ்மிக்கும் உண்மையாகவே காதல் மலர்ந்துவிட்டதோ என்று எண்ணுகிற அளவு இருவருமே ஒன்றிப்போயிருக்கிறார்கள். இசையமைப்பாளராக அறியப்பட்ட குமரன், அந்த வேலையில் கொஞ்சம் பின் தங்கிவிட்டாலும், முதல்பட இயக்குநர் என்பதை மறக்கச் செய்யும்படியாக இயக்கியிருக்கிறார். புதிய தூள் மாற்றி தேநீர் போட்டிருக்கலாம்.
|