அமெரிக்கா செல்லும் கனவில் உள்ள ஒருவன் எதிர்பாராத காதலினால் என்ன விதமான பிரச்னை களைச் சந்திக்கிறான் என்பதுதான் ராம்பிக்சர்ஸ் டாக்டர் ராம்தாஸ் வழங்கும் ‘யுவன் யுவதி’ படத்தின் கதை.
“நாம் அன்றாடம் பார்க்கும் இளைஞர்களில் ஒருவர் போல் பரத் கேரக்டர் இருக்கும். எந்த கேரக்டர் கொடுத்தாலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் பரத், இதிலும் கேரக்டருக்கு ஏற்ப, நிறைய ஹோம் ஒர்க் செய்து நடித்துள்ளார். கதிர் என்ற அவருடைய கதாபாத்திரம் கொஞ்சம் ஸ்டைலிஷ் என்று சொல்லலாம். நவ நாகரீகத்தைப் பற்றி பேசும் இவருக்கும், பண்பாடு கலாச்சாரம் பற்றி பேசும் அவருடைய அப்பாவுக்கும் இடையே நடக்கும் கருத்து யுத்தம் படத்தில் பெரும் பங்கு வகிக்கும். அப்பாவாக சம்பத் நடிக்கிறார்.
நாயகியாக ரீமா கல்லிங்கல் நடிக்கிறார். மிஸ் கேரளா பட்டம் வென்றுள்ள இவரை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளோம். படப்பிடிப்புக்காக ஷீஷல்ஸ் தீவுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தோம்.
என்னுடைய திட்டத்துக்கு தயாரிப்பாளர் பைஜா உடனடியாக செயல் வடிவம் கொடுத்தார். ஷீஷல் தீவின் அழகு ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும். விஜய் ஆண்டனியின் இசை படத்துக்கு பக்க பலமாக இருக்கும். நான்&ஸ்டாப் விறுவிறுப்பு நிறைந்த படமாக ‘யுவன் யுவதி’ இருக்கும்” என்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேல்.
ரா