தமிழ்நாட்டில் வருமானம்! கேரளாவில் முதலீடு!!அவ்ளோதான் மேட்டர்

நம்பர் நடிகைக்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டோகொட்டென்று கொட்டுகிறதாம். இளம் நடிகர்கள் அத்தனை பேருமே நம்பர் நடிகையோடுதான் ஜோடி சேரவேண்டும் என்பதை வாழ்க்கை இலட்சியமாகவே கொண்டிருப்பதுதான் காரணம். படத்தின் பூஜை, ஆடியோ வெளியீடு, புரமோஷன் வேலைகள் என்று எதற்குமே வரமாட்டேன் என்று நடிகை கண்டிஷன் போட்டாலும், எல்லாவற்றையும் ஒத்துக்கொண்டே தயாரிப்பாளர்கள் அவரோடு ஒப்பந்தம் போடுகிறார்கள்.கோடம்பாக்கத்தில் பல கோடிகள் வருமானம் ஈட்டும் அவர், மொத்தத்தையும் கொண்டுபோய் கேரளாவில்தான் போடுகிறார். காலிமனைகளாக வாங்கிக் குவித்து, கட்டிடங்கள் கட்டுகிறார். ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளாக இஷ்டத்துக்கும் வாங்கிப் போடுகிறார்.
இத்தனைக்கும் மத்தியில் வாராவாரம் யாருடனேயாவது காதல் விவகாரம் ஏதாவது பூதாகரமாக கிளம்பிவிடுகிறது. “இத்தகைய பரபரப்பான செய்திகள்தான் அவரது மார்க்கெட் சரியாமல் இருப்பதற்கான சரியான முதலீடு” என்று கூறி கண்ணடித்துச் சிரிக்கிறார்கள், கோடம்பாக்கத்தில் பழம் தின்று கொட்டை போட்ட சீனியர்கள்.