யோகா டீச்சர்!



ஹீரோயினிஸம்

1981ல் கர்நாடக மாநிலம் மங்களூரில் பிறந்தார் ஸ்வீட்டி என்கிற தேவதை. அனுஷ்கா ஷெட்டியாக தென்னிந்திய சினிமாவை ஆளுவார் என்று அப்போது முக்காலத்தையும் உணர்ந்து ெசால்லும் ஜோதிடனாலும் கணித்திருக்க முடியாது. ஆச்சாரமான குடும்பம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம். தூய்மையான வாழ்க்கை. அவர் யோகா டீச்சர் ஆனதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அழகான யோகா டீச்சரை சினிமா விட்டு வைக்குமா? 2005ஆம் ஆண்டு ‘சூப்பர்’ என்கிற தெலுங்குப் படத்தில் அறிமுகமானார். நான்கு படத்தில் நடித்துவிட்டு அப்புறம் தமிழுக்கு வருவதுதானே சினிமா நியதி. அனுஷ்காவும் வந்தார். சுந்தர்.சி இயக்கத்தில் ‘ரெண்டு’ படத்தில் தமிழுக்கு வந்தார். சுமாரான காமெடிப் படம். ஓரளவுக்கு ஓடவும் செய்தது. ஆனால் அனுஷ்காவைத்தான் யாரும் கண்டு கொள்ளவில்லை. படத்தை விமர்சித்த மீடியாக்கள் கூட அனுஷ்காவின் அசாதாரமான உயரத்தை கிண்டலடித்தன. இதனால் நொந்து போனவர், தமிழ்ப் படமே வேண்டாம் என்று மீண்டும் தெலுங்குப் பக்கமே சென்றார்.

“தன்னை புறக்கணித்த தமிழ் சினிமாவை தன் பின்னால் அலைய விட வேண்டும்” என்று அவர் மனதில் சபதம் ஏற்றிருந்தாரோ என்னவோ ெதரியவில்லை. சரியாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘அருந்ததி’யாக அதிரடியாக மீண்டும் பிரவேசித்தார். இப்ேபாது அவரது ஆறடி உயரம் கொண்டாடப்பட்டது. குறிப்பாக பெண்கள் அவரை பெருவாரியாக வரவேற்றார்கள். தியேட்டர் பக்கமே வராமல் ஒதுங்கி இருந்த தாய்க்குலத்தை குடும்பத்தோடு கொத்தாக அரங்குக்கு அைழத்து வந்தார் ‘அருந்ததி’ என்கிற அனுஷ்கா.

‘அருந்ததி’க்கு முன் ‘அருந்ததி’க்குப் பின் (அ.மு, அ.பி) என்று அவரது வாழ்க்கையைப் பிரிக்கலாம். ‘அருந்ததி’க்கு முன் அவர் வெறும் கமர்ஷியல் ஹீரோயின்தான். எந்தப் படத்திலும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு அவர் நடித்ததில்லை. பத்தோடு பதிெனான்றாகத்தான் இருந்தார். ஆனால் ‘அருந்ததி’க்குப் பிறகுதான் அவரது அவதாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்திய நடிகர்களிலேயே உடம்பை கேரக்டருக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதில் நடிகர்களில் வட நாட்டில் அமீர்கான், தென்னாட்டில் விக்ரம்.

ஆனால் நடிகைகளில் மொத்த இந்தியாவுக்கே அனுஷ்காதான். இந்திய சினிமா சரித்திரத்தை திருப்பிப் போட்ட பாகுபலியில், நாற்பது வயதை தாண்டியவராக ஹீரோ பிரபாஸுக்கு தாயாக (முன்பு பிரபாஸுக்கு ஜோடியாகவே நடித்திருக்கிறார்) துணிச்சலுடன் நடித்தார். அதிலும் முதல் பாகத்தில் ஒரு சில காட்்சிகள்தான் என்று ெதரிந்தும் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு நியாயம் செய்தார். அதற்கும் சேர்த்து விரைவில் வெளியாகவிருக்கும் இரண்டாம் பாகம் முழுக்க அருந்ததியின்... மன்னிக்கவும்... அனுஷ்காவின் ராஜ்ஜியம்தானாம்.



அடுத்து, ராணி ருத்ரமாதேவி. ஆந்திராவை ஆண்ட ஒரு மகராணியின் கேரக்டருக்காக அவர் தன்னை வருத்திக் கொண்டது தனி புத்தகமாக எழுத வேண்டியது. இரண்டு படங்களிலுமே ஹீரோவுக்கு இணையாக வாள்வீச்சு, கத்திச்சண்டை, குதிரையேற்றம் என அவர் நிகழ்த்திக் காட்டியிருக்கும் சாகசங்கள் விரைவில் வெள்ளித் திரையை அலங்கரிக்க இருக்கின்றன. இந்தப் படங்களில் அனுஷ்கா பெறப்போகும் புகழ், ஒரு நடிகை 100 வருடம் நடித்தாலும் பெற முடியாதவையாக இருக்கும் என்று திரைஆர்வலர்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.

சாதித்துவிட்டோம் என்பதற்காக ‘அப்பாடா...’ என்று அவர் ஓய்வெடுத்து விடவில்லை. ஒரு படத்தில் ஹீரோவுடன் டூயட் பாடிவிட்டு ‘களைத்து விட்டேன்...’ என்று வெளிநாட்டுக்குப் போய் விடுமுறையை உல்லாசமாக அனுபவித்துவிட்டு வரும் நடிகைகளுக்கு மத்தியில், இருபெரும் படங்களில் நடித்து முடித்து விட்டு அடுத்த ரிஸ்க்கில் இறங்கிவிட்டார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை கூட்டி நடித்து வருகிறார். கேரக்டருக்காக உடல் இளைத்த நடிகைகள் கூட இருக்கிறார்கள். கூட்டிய நடிைக அனுஷ்கா மட்டுமே. நடிப்பை தொழிலாக, பணம் காய்க்கும் மரமாக, ஆடம்பர வாழ்க்கையின் அடையாளமாகக் கருதும் நடிகைகள் மத்தியில் நடிப்பை தவமாக, வரமாக, தெய்வமாக மதித்து வாழும் அனுஷ்கா நிஜ வாழ்விலும் ஹீரோயினாகவே ஜொலிக்கிறார்.

- மீரான்