ஸ்ருதிஹாசனின் தொப்புள்ரீடர்ஸ் கிளாப்ஸ்!

எங்கள் சிங்கம் சூர்யா நடிக்கும் ‘சிங்கம்-3’ திரைப்படம் குறித்த செய்தி அருமையாக இருந்தது. ‘ஏழாம் அறிவு’க்குப் பிறகு மீண்டும் சூர்யாவோடு ஸ்ருதி இணைகிறார் என்பதே எங்கள் மனசையும், நெஞ்சையும் குளிர்விக்கும் தகவல்.
- சையது அபுதாகீர், ‘அஞ்சான்’ சூர்யா ரசிகர் நற்பணி மன்றம், பழனி.

ஸ்ருதிஹாசனின் தொப்புளுக்கு ‘மத்திய தரைக்கடல்’ என்று வர்ணிப்பு எழுதிய கரங்களுக்கு வைரமோதிரம்தான் செய்து மாட்டவேண்டும். புளோ-அப்புகளுக்கான கமெண்டுகளில் இளமையும், தமிழும் புகுந்து விளையாடுகிறது.
- முருகேசன், ஊத்தங்கரை.

‘டைம் மெஷின்’ பகுதியில் இடம்பெற்றிருந்த எங்கள் ஊர் நடிகர் நாசரின் புகைப்படங்கள் அருமை.
- முஸ்தபா, செங்கல்பட்டு.சரோஜாதேவி பதில்களில் தென்படுவது கவர்ச்சியா, ஆபாசமா என்றே கணிக்க முடியவில்லை. நடிகைகள் கவர்ச்சிக்கும், ஆபாசத்துக்கும் கொடுக்கும் விளக்கம் மாதிரி குழப்புகிறது. ஆனாலும், நறுக்கென்ற சுவையான பதில்கள்.
- நந்தினி, கும்பகோணம்.

ஜி.வி.பிரகாஷ் கிஸ் அடிக்க 35 டேக் எடுத்துக்கொண்டது பயம் காரணமாகவா அல்லது ஆத்துத்தண்ணியை அள்ளிக் குடிப்போம் என்கிற சுதந்திர மனப்பான்மையா என்று தெரியவில்லை. நயன்தாரா அவரோடு இணைந்து நடிக்க தயங்குவதற்கு தகுந்த காரணம் இருக்கத்தான் செய்கிறது.
- முனிரத்தினம், வத்தலக்குண்டு.

அபிநயாவின் ஸ்டார் ப்ரொஃபைல், அவரைப் போலவே அழகாக இருந்தது.
- வைதேகி, குடியாத்தம்.

‘பாட்டுச்சாலை’ தொடரில் எங்கள் மாவட்டத்து கவிஞர் அறிவுமதி குறித்த அறிமுகம் அருமையாகவும், அறியாத தகவல்களை சொல்லக் கூடியதாகவும் இருந்தது. பாராட்டுகள்.
- கருணாகரன், விருத்தாசலம்.