அஜித்தின் அரசியல்!நடிகர் சங்கத் தேர்தல் களைகட்டி வருகிறது. சரத்குமார் - விஷால் என்று இரு தரப்பும் போட்டி போட்டு நடிக நடிகையரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். முதல்நாள் மனோரமாவை விஷால் தரப்பு போய் பார்த்தால், மறுநாளே அங்கு சரத்குமார் தரப்பு போய் பார்க்கிறது. ரஜினி, கமல், விஜய் என்று ஸ்டார் நடிகர்களைப் பார்த்து ஓட்டு கேட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து, பத்திரிகைகளில் பிரசுரிக்க பெரும் போட்டாபோட்டி நடந்துவருகிறது.ஆனால்-அஜித் மட்டும் இரு தரப்பையுமே சந்திக்க மறுத்து வருகிறார். “எனக்கு அரசியல் வேண்டாம். எல்லோருக்கும் பொதுவானவனாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய ரசிகர்களும்கூட அவரவருக்கு விருப்பமான நிலைப்பாட்டினை எல்லா விஷயங்களிலுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்” என்று நெருக்கமானவர்களிடம் இதற்கு காரணமும் கூறுகிறாராம். ‘தல’ வழி. தனி வழி!