ரயிலில் மலரும் காதல்



சிக்கிக்கு சிக்கிக்கிச்சு விமர்சனம்

நண்பனை வழி அனுப்பி வைக்க ரயில் நிலையம் வரும் நாயகன் மிதுன், அங்கே நாயகி மிருதுளாவைப் பார்க்கிறார். பார்த்தவுடன் காதல் தீ பற்றிக் கொள்கிறது. அறிமுகமே இல்லாதவர்கள் அடுத்த சில நிமிடங்களில் நெருக்கமாகிறார்கள். ஒரு கட்டத்தில் மிதுன் தன் காதலை தெரிவிக்கும் போது, இருவருமே ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள். சிக்கல் எப்படி தீர்ந்தது என்பது சுபமான க்ளைமாக்ஸ். மிதுன் காதலன் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். வசனங்களை ஒப்பிக்காமல் உடல் மொழியில் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. மிருதுளாவின் நடிப்பு சிம்பிள்.



டெக்னிஷீயன்களில் பாராட்டப்பட வேண்டிய முதல் மனிதர் ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ்குமார். இட வசதி இல்லாத ரயில் பெட்டியில் கேமரா ஜாலங்கள் அமோகம். அடுத்தது விஜய் பெஞ்சமினின் இசை. டி.ராஜேந்தர் பாடியுள்ள ‘ஸ்டாரோ மாரோ’ பாடல் கலக்கல் காக்டெயில். படம் ஆரம்பிக்கும் விதம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் காமெடி ஏரியாதான் படத்துக்கு வில்லன். காதல் படம் என்பதால் கசமுசா காட்சிகளை சேர்க்காமல் கண்ணியமாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் என்.ராஜேஷ்குமார்.