தோல்வி அடைந்த ஹீரோ!



அஜய் தேவ்கன் நடிக்கும் ‘பாதுஷாவோ’ படத்திலிருந்து திடீரென விலகி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

சல்மான்கான் தயாரிப்பில் வெளியான ‘ஹீரோ’ தோல்வி அடைந்திருக்கிறது. நடிகை ஜியாகான் தற்கொலை வழக்கில் சிக்கிய சூரஜை இதில் சல்மான் ஹீரோவாக அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிக்கும் ‘சிங் இஸ் பிளிங்’ படத்துக்கு குறிப்பிட்ட சமூகத்தினர் பிரச்னை கிளப்ப, கோர்ட் மூலம் படத்துக்கு கிரீன் சிக்னல் கிடைத்துள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கொன்கனா சென், நடிகர் ரன்வீர் ஷோரே இருவரும் திடீரென பிரிந்துவிட்டனர்.



“தொடர் தோல்விகளால் ரன்பீர் கபூர் துவள மாட்டார். மீண்டும் ஹிட் படங்கள் தருவார்” என அவரது காதலி கேத்ரினா கைப் நம்பிக்கையோடு சொல்கிறார்.

‘தங்கால்’ படத்தில் தலை முடி, தாடிக்கு டை அடிக்காமல் நடித்துள்ளார் ஆமிர்கான். இதில் அவருக்கு, 25 வயது மகளுக்கு அப்பா வேடம்.

‘காலண்டர் கேர்ள்ஸ்’ படத்தில் பிகினியில் பல காட்சிகளில் நடிக்கச் சொன்னதால் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் கங்கனா ரனாவத்.

திருமணம் செய்ய விரும்பாத சுஷ்மிதா சென், தனது வளர்ப்பு மகளை விஞ்ஞானியாக்க விரும்புகிறாராம்.

‘பஜ்ராவோ மஸ்தானி’ படத்தில் தீபிகா படுகோனேவுக்குத்தான் முக்கியத்துவம் என தெரிந்தே நடித்ததாக சொல்கிறார் பிரியங்கா சோப்ரா.

- ஜியா