திரிஷாவின் 50 படம்!
நடிக்க வந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. விரைவில் அரை சதம் அடிக்க இருக்கிறார். “கமல்சாருக்கு ஜோடியாக ‘மன்மதன் அம்பு’க்குப் பிறகு ‘தூங்காவனம்’ படத்தில் நடிக்கிறேன். அனேகமாக இதுதான் எனக்கு 50வது படம். அப்படி அமைந்தால் அதைவிட பெரிய சந்தோஷம் எதுவுமில்லை. 2002ல் ஹீரோயினாக அறிமுகமானேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று நாற்பத்தேழு படங்கள் முடித்தாயிற்று. மலையாளத்தில் மட்டும் நடிக்க ஏன் வாய்ப்பே அமையவில்லை என்று தெரியவில்லை.
 ‘பூலோகம்’, ‘போகி’ ‘அரண்மனை-2’ என்று தமிழில் இத்தனை ஆண்டுகள் கழித்தும் முன்னணி நடிகையாகவே இருப்பது பெருமையாக இருக்கிறது” என்கிறார் திரிஷா. இவரை ‘புக்’ செய்ய நேராகப் போய்த் தான் இயக்குனர்கள் கதை சொல்ல வேண்டும் என்பதில்லை. ஈமெயில் அனுப்பினாலே போதும். படித்துவிட்டு, பிடித்திருந்தால் அம்மாவிடம் சொல்கிறார். அவரும் ஒப்புக்கொண்ட பிறகே சம்பளம், கால்ஷீட் மாதிரி மற்ற விஷயங்களைப் பேசுகிறார். -தேவராஜ்
|