டோலிவுட் கோங்குரா



நம்மூரில் சரியாக ‘பிக்கப்’ ஆகாத ரெஜினா, அக்கட தேசத்தை ஆட்டை போடலாம் என்று படையெடுப்பு நடத்தினார். அடுத்தடுத்த படங்களில் தாவணியும், சுடிதாரும் கொடுத்து குடும்ப குத்து விளக்காக மாற்றி கும்பிடத் தொடங்கிவிட்டார்கள் ஆந்திரவாலாக்கள்.

இப்படியே போனால் பொழைப்பு டான்ஸ் ஆகிவிடுமென்று நினைத்த ரெஜினா, தனக்கு கிளாமரும் வரும் என்று நிரூபிக்க ஹாட்டான போட்டோஷூட்டில் பங்கேற்று, எடுக்கப்பட்ட படங்களை சுடச்சுட பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆஹா, ரெஜினாவுக்கு இவ்வளவு ‘தாராள மனசா?’ என்று வியந்துபோன இயக்குனர்கள், உடனடியாக ‘லைக்’ போட்டதோடு, இவரை எப்படி தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று படைப்பாற்றலை கசக்கி சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களாம்.