பாலிவுட் சமாச்சார்



ஒருகாலத்தில் மலையாள ஹீரோக்களை ஷகீலா கலங்கடித்ததைப் போல, இப்போது பாலிவுட் ஹீரோக்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருக்கிறார் சன்னி லியோன். இவர் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே, தங்கள் ரிலீஸ் டேட்டை தள்ளிவைத்துக் கொள்ளலாமா என்று பெரிய ஹீரோக்களே ஆலோசிக்குமளவுக்கு சிங்கிள் ஸ்க்ரீன் குயீனாக கோலோச்சுகிறார்.

‘பேய்மான் லவ்’ படத்தின் சூடான ஸ்டில்களை கசியவிட்டிருக்கும் சன்னி, “இது இளசுகளுக்கு மெசேஜ் சொல்லும் படம்” என்று சமூக அக்கறையோடு குறிப்பிடுகிறார். சன்னியோட மெசேஜ் என்னன்னு எங்களுக்குத் தெரியாதா என்று புன்முறுவலிட்டபடியே சந்தோஷிக்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.