ஹாலிவுட் ஜாலி!
சுற்றுப்புறத்தை மறந்து உதட்டுக்கு வேலை கொடுத்துக் கொண்டிருக்கும்
குடுமிக்காரர் யாரென்று தெரிகிறதா? ‘டைட்டானிக்’ பட ஹீரோ லியானார்டோ
டிகேப்ரியோதான். இவருக்கு எத்தனை காதலிகள் என்று கணக்கு வழக்கே இல்லை.
சமீபமாக கெல்லி என்கிற இருபத்தி நான்கு வயது மாடலோடு சுற்றிக்
கொண்டிருக்கிறார்.
 இவரைப்
பற்றி கிசுகிசு எழுதி போர் அடித்துப் போன பத்திரிகையாளர்கள் கண்டுகொள்ளவே
இல்லை. எனவே, தடாலடியாக தன் புது காதலியோடு நியூயார்க் நகரில் சைக்கிளில்
வலம் வந்தார். எதிரில் ஒரு போட்டோகிராபரைக் கண்டதுமே குஷியாக ஒரு லைவ் கிஸ்
சீன் நடித்துக் காண்பித்தார்.
|