அவ்ளோதான் மேட்டர்: நந்திதா அலப்பறை!



‘புலி’ படத்தின் ஃபிளாஷ்பேக்கில் விஜய் ஜோடியாக நடிக்கும் நந்திதா ஸ்வேதா செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை என்கிறார்கள். பெரிய நடிகரின் படத்தில் நடிப்பதால் தன்னை ஒரு முன்னணி நடிகையாக அவராகவே பாவித்துக்கொண்டு, யாருடைய போனையும் அட்டெண்ட் செய்வதில்லையாம்.



 நந்திதாவுக்கு தெரியுமோ இல்லையோ, பாவனா மறுத்த வேடம் இது. தமிழில் தனது ரீ-என்ட்ரி ரொம்ப சின்னதாக இருந்துவிடக்கூடாது என்று வேண்டாம் என்று அவர் ஒதுக்கிய வேடத்தைத்தான் நந்திதா இப்போது செய்து கொண்டிருக்கிறார். இதற்கே இந்த அளும்பு!

- தேவராஜ்