பொது அறிவுப் பக்கம்



ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசியாக ‘புலி’ படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி

மிஷ்கின் தயாரித்து, வில்லனாக நடிக்கும் படத்தில் ‘கற்றது தமிழ்’ ராம் ஹீரோ. மிஷ்கினின் தம்பி இயக்குகிறார். இந்தப் படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர் நடிகர் செல்வா என்கிறார்கள். அதற்கேற்ப பூஜையே கூட செல்வா வீட்டில்தான் தடபுடலாக நடந்தது.

‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா, கதை கேட்பதற்காக தன் வீட்டு மொட்டை மாடியில் நவீன அலுவலகம் ஒன்றை அமைத்திருக்கிறார்.

ஹன்சிகாவுக்கு தொழில்பக்தி அதிகம். ஷூட்டிங்கில் கேமிராவை தொட்டுக்கும்பிட்டபிறகே நடிக்க ஆரம்பிப்பார்.

‘பள்ளிக்கூடம் போகாமலே’, ‘சிகப்பு’, ‘நிசப்தம்’ - இதெல்லாம் இயக்குனர் வெங்கடேஷ் நடிக்கும் படங்கள். ஜெய், சரத்குமாரிடம் எல்லாம் கதை சொல்லி ஓக்கே வாங்கியிருக்கிறாராம். எப்போது இயக்குவார் என்றுதான் தெரியவில்லை.

- எஸ்