செயற்கை எடுப்பு! ராக்கி புலம்பல்



மூன்றே நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.63 கோடி வசூல் குவித்துள்ளது சல்மான்கானின் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’. படம் பார்த்துவிட்டு எமோஷனல் ஆகிப்போன ஆமிர்கான், அழுதுவிட்டாராம்.

‘பிரதர்ஸ்’ படத்தின் ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறாராம் அக்‌ஷய்குமார்.
 
அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு வெளியாகும் ‘ஃபேன்’, ‘ரயீஸ்’ என இரண்டு படங்களின் டீசரை அவசர அவசரமாக இப்போதே வெளியிட்டுள்ளார் ஷாருக்கான்.

‘பாஜிராவ்’ மஸ்தானி படத்தில் பிரியங்கா சோப்ராவை விட தீபிகா படுகோனேவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம்.

டிஸ்கவரி சேனலில் உண்மைச் சம்பவங்கள் தொடர்பான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார் ஹ்ரித்திக் ரோஷன்.

ராஜமவுலியின் சினிமா அர்ப்பணிப்பு குணம் வியக்க வைக்கிறது. இதனால் என்னைப் பார்த்து நானே வெட்கப்படுகிறேன் எனக் கூறியுள்ளார் டைரக்டர் கரண் ஜோஹர்.

மாஜி காதலன் ஷாஹித்கபூர் தனது திருமணத்துக்கு அழைக்காததால் வருத்தம் இல்லை என்கிறார் கரீனா கபூர்.

செயற்கை அழகால் எனது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என புலம்புகிறார் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த்.

- ஜியா