ரீடர்ஸ் கிளாப்ஸ்!



காக்காமுட்டைக்கு ஹெல்மெட்டா?

மியா  ஜார்ஜ் தன் லட்சியமாக டீச்சர் ஆகணும் என்று சொன்னார் பாருங்கள். அப்படிப் போடு அறுவாளை என்று சொல்லத் தோன்றுகிறது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு பேட்டியில் ஜீவனைக் கண்டதும் சிலிர்ப்பாக இருந்தது. இனியாவது அவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்.
- திலீப்குமார், கோவை.

‘கயல்’ ஆனந்தி, ‘வழக்கு எண்’ மனிஷா என்று ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் காம்பினேஷனே கலக்கல். ஜி.வி.பிரகாஷுக்கு எங்கிட்டோ மச்சமிருக்கு.
- சங்கர், திருநெல்வேலி.



காக்கா முட்டைக்கு (ஐஸ்வர்யாவுக்கு) ஹெல்மெட் பாந்தமாக இருக்கிறது.
- கணேஷ், திருப்புலிவனம்.

மறந்தேபோன அசினை சரியான நேரத்தில் நினைவுபடுத்தி இருக்கிறீர்கள். ‘ஆல் ஈஸ் வெல்’ அவருக்கு சிறப்பாக அமைய நான் வணங்கும் சத்குருவை வேண்டுகிறேன்.
- மணிபாரதி, திருவண்ணாமலை.

சமவெளிக்கு நடுவில் அமைந்த புதைகுழியில் சிக்கிவிட்டோம் சார். இதழ் முழுக்க ஸ்டில்ஸுகளுக்கு கலக்கலாக எழுதப்பட்டிருந்த கமெண்டுகளைத்தான் சொல்கிறேன். தொடருங்கள்.
-வினீத், பாலக்காடு.

சரோஜாதேவி பதில்கள் அமோகம். இந்த வயசுலே நானே வெட்கப்பட வேண்டியதாயிடிச்சி. இன்னும் கொஞ்சம் காரம், மணம், சுவை கூட்டவும்.
- சோமநாத பாகவதர், மன்னார்குடி.

தமிழின் முன்னணி நடிகராக இருந்தும், தலைக்கனம் இல்லாமல் ‘தல’, ஒரு வளரும் நடிகரை வளர்க்கும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறார். தல போல வருமா?
- சிவா, திருச்சி.

சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்களுடனான தங்கள் அனுபவங்களை வாசகர்கள் கடிதத்தில் பகிர்ந்து கொள்ளலாம். வித்தியாசமான அனுபவங்கள் ‘வண்ணத்திரை’யில் பிரசுரமாகும்.