சரோஜா தேவி பதில்கள்



Aகலைவனின் Aக்கம்!

கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் என்ன வித்தியாசம்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

காட்டிக்கிட்டு நின்னா கவர்ச்சி. மேலதிகமா செயல்படத் தொடங்கினா ஆபாசம்.

‘ஏ’ சான்றிதழ் பெற்ற படங்கள் என்று ஆவலாக தியேட்டருக்கு போய் பார்த்தால், ஒன்றும் தேறுவதில்லையே?
- ஏகலைவன், ஏற்காடு.

உங்கள் Aக்கம் புரிகிறது Aகலைவன். தணிக்கைத்துறையின் கத்தி ஷார்ப்பாக இருக்கிறது. A சான்றிதழ் என்பதே நம்மை Aமாற்றுவதற்கு என்றாகி விட்டது. ஜூஸ் என்று நம்பி உறிஞ்சினால் உள்ளே வெறும் கொட்டைதான் இருக்கிறது.

சுயமாக முன்னேற விரும்புகிறேன். என்ன செய்யலாம்?
- ரமேஷ், மார்த்தாண்டம்.

எவ்வளவு நாளைக்கு சுயமாவே முன்னேற விரும்புவீங்க. நல்ல பார்ட்னரை சேர்த்துக்கோங்க.

‘வாலு’ படத்துக்கு உங்க ஸ்டைலில் ஒரு tagline சொல்லுங்களேன்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

வேணுமின்னேதானே வாயை நோண்டறீங்க?

சரோஜாவுக்கு பிடித்த விளையாட்டு என்ன?
- ராமகிருஷ்ணன், கோவில்பட்டி

‘செஸ்’சுன்னு சொன்னா நம்பவா போறீங்க?

முன்பெல்லாம் செக்ஸ் பாம், செக்ஸ் சைரன் என்றெல்லாம் குறிப்பிட்ட நடிகைகளுக்கு பட்டம் கொடுப்பார்களே, இப்போது ஏன் அந்த பண்பாடு அழிந்துவிட்டது?
- விவேக், சிவகாசி

சிந்திக்கவைக்கும் கேள்வி. ஆனால்- நாடு எவ்வளவோ மேடு, பள்ளங்களைத் தாண்டி விரைந்து கொண்டிருக்கையில் இதற்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.