பிடிபடாத நித்யா!
நித்யா மேனனுக்கு பாடவேண்டும் என்று ஆசை. மலையாளத்தில் சில பாடல்கள் பாடியுள்ளார். தமிழில் யாரும் அவரை அழைக்கவில்லையென்று வருத்தப்படுகிறார். அதற்கு என்ன காரணம் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
அதாவது, நித்யா மேனனை செல்போனில் பிடிக்க முடியாது. அவரது உதவியாளர்கள் சிலர், எந்த விஷயத்தையும் அவரது கவனத்துக்கு உடனே கொண்டு செல்ல மாட்டார்கள் என்பது கோலிவுட்டில் சொல்லப்படும் குற்றச்சாட்டு.
இப்படி இருந்தால், அவரை நம்பி எப்படி ரெக்கார்டிங் வைப்பது என்று கையைப் பிசைகிறார்களாம் சில இசையமைப்பாளர்கள். ஷூட்டிங்கிற்கு மட்டும் எப்படி சரியாக வருகிறார் என்பது புரியாத புதிர்.
-தேவா
|