முன்னணி நடிகையின் ஆட்டோ பயணம்!



எர்ணாகுளம் கல்லூரியில், பி.ஏ கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படிக்கிறார் லட்சுமி மேனன். முன்னணி நடிகை என்ற பந்தாவை விட்டு, சாதாரண மாணவி போல் கல்லூரிக்குச் சென்று வரும் தன் மகளை பெருமை பொங்கப் பார்க்கிறாராம் அவரது அம்மா.

சமீபத்தில் லட்சுமி மேனனின் காரில் கோளாறு ஏற்பட்டதால், சட்டென்று வாடகைக்கு ஆட்டோ பிடித்து கல்லூரிக்குச் சென்று வந்திருக்கிறார். கேரளாவிலும் ரசிகர்களால் அறியப்பட்ட நடிகை என்ற  புகழ் இருந்தாலும், இப்படி சாதாரணமாக ஆட்டோவில் வந்து இறங்கிய அவரைப் பார்த்து பொதுமக்கள் மட்டுமின்றி, சக மாணவிகளும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

-ராஜ்