ஆக்டராசனம்!



இப்போது யோகாசனம்தான் ஹாட் டாபிக். பிரதமர் நரேந்திரமோடியே நடு ரோட்டில் உட்கார்ந்து யோகாசனம் செய்யும்போது சாதாரண பொதுமக்கள்  அதை அத்தனை ஈசியாக எடுத்துக் ெகாள்ள முடியுமா?

யோகாசனம் என்பது உடலும், மனதும் இணையும் ஒரு பயிற்சி. தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் சிலர் கீழ்க்கண்ட யோகாசனங்களைச் செய்தால் அவர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் ஆரோக்கியமாக இருக்கலாம்....

சர்வாசனம்

இந்த நேரத்தில் இந்த ஆசனம் என்று விதிமுறை வைத்துக் கொள்ளாமல் எந்த நேரத்தில் எந்த ஆசனம் வருகிறதோ அந்த ஆசனத்தைச் செய்வதுதான் சர்வாசனம். இதுதான் சவுகரியமான ஆசனம். உள்ளுக்குள்ள பட்டு சொக்கா போட்டிருந்தாலும் வெளியில கதர் ெசாக்கா போட்டு செய்தால்தான் காத்து கருப்பு அண்டாது.

ஆபத்தாசனம்

இந்த ஆசனமே கொஞ்சம் ஆபத்தானது. அதுதான் பெயரே அப்படி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆசனத்தை முறைப்படி செய்தால் தனுஷ் மாதிரியும் ஆகலாம், அர்னால்டு மாதிரியும் ஆகலாம். டாப் மாடல் மாதிரியும் ஆகலாம்.

இந்த ஆசனத்தை ஆண்டுக் கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும்போது எதிராளி எந்த கடின ஆசனமும் செய்யாமல் சம்பளத்தைக் கோடி கோடியாக வாங்கி செட்டிலாகிவிடுவார்கள். அதையெல்லாம் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் நம் கடமை ஆபத்தாசனம் செய்வதே என்று இருக்க வேண்டும்.

போட்டியாசனம்

இந்த ஆசனம் கொஞ்சம் வித்தியாசமானது. திருச்சி, மதுரை, சேலம்னு ஓடிக்கிட்டே பண்ணணும். படம் ஓடுதோ இல்லையோ நாம ஓடணுங்கற நம்பிக்கை தருகிற ஆசனம். தினசரி பேப்பர்ல படமும் செய்தியும் வர்ற மாதிரி இந்த ஆசனம் பார்த்துக் கொள்ளும்.  இலவச திருமண தம்பதிகள், நல்ல மார்க் எடுத்த மாணவர்களோடு சேர்ந்து இந்த ஆசனத்தை செய்தால் வருங்கால முதல்வர் கனவும் கைகூடும்.

சகோதராசனம்

இந்து ஆசனத்தை உடன் பிறந்த அண்ணனோடு இணைந்துதான் செய்ய முடியும். நடிப்பே வராமல் நடிக்கவும், பாடவே முடியாவிட்டாலும் பாடவும், இசை பற்றி சுத்தமாகத் தெரியாவிட்டாலும் இசை அமைக்கவும் துணை புரியும் ஆசனம் இது. எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும், அவர்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவி–்ட்டாலும் இந்த ஆசனம் நண்பனாக்கிக் கொடுத்திடும்.

மவுனாசனம்

எது நடந்தாலும் மூச்சு விடாமல் அமைதியாக இருக்கும் ஆசனம். ஏதாவது திடீர் பிரச்னை என்றால் அம்மா... என்று லேசாக முணுமுணுத்தால் போதும். அரசியலாசனம்தான் பெஸ்ட்டுன்னு அப்பாவே சொன்னாலும் கம்முன்னு மவுனாசனம்தான் செய்யணும். - விஜய்

கணக்காசனம்

ஆசனத்துல எங்கேயிருந்து மேத்ஸ் வந்ததுன்னு யோசிக்கக் கூடாது. எண் சாண் உடம்புக்குள்ளே மேத்ஸ் இருக்கும்போது ஆசனத்துல இருக்காதா? இதையும் அதையும் செய்தால் எது வரும்னு கணக்குப் பண்ணி செய்றதுதான் கணக்காசனம். எந்த ஆசனத்தை எப்படிச் செய்தாலும் லாபம் வருதான்னு மட்டும் பார்க்குற ஆசனம்.  - விஜய் சேதுபதி

ஹீரோயினாசனம்

இது ஒரு அபூர்வ சக்தி கொண்ட ஆசனம். யார் என்ன செய்தாலும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். கோபப் படக்கூடாது. அழுகிற சீனாக இருந்தால்கூட இதனை சிரித்துக் கொண்டே செய்ய வேண்டும். அழகான ஹீரோயின்களோடு நிறைய பேசிக்கொண்டே இந்த ஆசனத்தைச் செய்யலாம். இதைச் செய்து முடித்தவுடன் பிரியாணி சாப்பிடுவது நல்லது. சைக்கிளில் சுற்றிக் கொண்டேயும் இந்த ஆசனத்தைச் செய்யலாம்.

ரிலீஸாசனம்

நடிக்கிற படம் ரிலீசாவதற்கு உதவுகிற ஆசனம் இது. கண்ணையும், வாயையும் மூடிக்கொண்டு அமர்ந்திருக்க வேண்டும். நடிக்கிற படம் ரிலீசாகணும் என்று மனதுக்குள் நினைக்க வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என்கிற கர்வம் உள்ளே வந்துவிடமாமல் பார்்த்துக் ெகாள்ள வேண்டும்.

ஷூட்டிங்கிற்கு நேரத்துக்குப் போகவிடாமல் தடுக்கிற சக்திகளை இந்த ஆசனம் தடுத்து நிறுத்தும். இந்த ஆசனம் செய்யும்–்போது நயன்தாரா, ஹன்சிகா நினைவுகள் வராமல் கண்டிப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

-மீரான்