மகளைப் பார்த்து கமல் பெருமிதம்!
ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் தெரியாது என்று யாராவது அவரிடம் ஆங்கிலத்தில் பேசினால் கொதிக்கிறார். ‘ஹலோ... நான் கமல் பொண்ணுங்க. நான் பேசற அளவுக்கு உங்களால தமிழ்ல பேச முடியுமான்னு பாருங்க’ என்று கடகடவென்று தமிழில் பேசி அசத்துகிறார். இது, தமிழ்நாட்டில். ஆந்திராவுக்குச் சென்றால், தெலுங்கில் பொளந்து கட்டுகிறார்.
மும்பைக்குச் சென்றால், இந்தி ருத்ர தாண்டவமாடுகிறது. இப்படி சகலகலா வல்லியாக இருக்கும் தன் மகளைப் பெருமிதமாகப் பார்க்கும் கமல்ஹாசன், சென்னைக்கு வந்து தன்னை எப்போதாவது ஒருமுறை பார்க்கும் மகளை, திடீரென்று பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்னை நகரை வலம் வருவாராம். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, இருவரும் ஹெல்மெட் போட்டுக் கொள்வார்களாம்.
‘நான் அப்படி ஒன்றும் பேரழகி இல்லை’. இப்படிச் சொன்னது, சாட்சாத் நம்ம சமந்தா என்றால் நம்ப முடிகிறதா? அம்மணி அவ்வளவு ஓப்பன் ஹார்ட். ‘சென்னையில் இருக்கும் கல்லூரியில் படித்தபோது, யாராவது ஒருவன் என் பக்கம் திரும்பிப் பார்த்து, ‘ஐ லவ் யூ’ சொல்ல மாட்டானா என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால், ஒருவர் கூட திரும்பிப் பார்த்தது இல்லை. காரணம், நான் அவ்வளவு பெரிய அழகி இல்லை.
சினிமா நான் விரும்பி, ஆசைப்பட்டு தேர்வு செய்த தொழில். நான் நடிக்க வந்த பிறகுதான், மற்றவர்கள் என்னை அழகாக்கத் தொடங்கினார்கள். ஸோ, என்னிடம் இப்போது இருக்கின்ற அழகு இயற்கையானது அல்ல. என்றாலும், மனதை இளமை பொங்க வைத்துக்கொள்வதால், எப்போதும் நான் அழகாகத் தெரிகிறேன்’ என்கிறார்.
- தேவராஜ்
|