தினசரி சம்பளம்!



சிருஷ்டி டாங்கே பற்றி அடிக்கடி புகார் வருகிறது. அதாவது, தினசரி சம்பளமாகக் கேட்கிறாராம். அதுவும் பெரிய தொகையில். இதுபற்றி அவரிடம் கேட்டால், சிரிக்கிறார். ‘ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போது, இத்தனை நாட்களுக்கு கால்ஷீட் என்று பிரித்துக் கொடுக்கிறேன்.

அதற்கான சம்பளம் எவ்வளவோ அதைக்கேட்டு வாங்குகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? என் வளர்ச்சியைத் தடுக்க நினைப்பவர்கள்தான் இதுபோல் ஆதாரம் இல்லாத வதந்திகளைப் பரப்புகின்றனர். அதை நான் கண்டுகொள்ள மாட்டேன்’ என்கிறார்.

- தேவா