மீண்டும் சிம்பு- ஹன்சிகா!



ஐஸ்வர்யா ராஜேஷ் ஜில்லென்று இருக்கிறார். காரணம், ‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா மாதிரி எனக்கும் வெயிட்டான கேரக்டர் கிடைத்தால், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கத் தயார் என்று காஜல் அகர்வால் கூறியதைக் கேள்விப்பட்டு குளிர்ந்து விட்டாராம்.

நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல், தன்னை ஒரு முன்மாதிரி நடிகையாகவும், தனது கேரக்டரை உயர்த்திச் சொன்னதையும் அறிந்து, அவர் மாதிரி பெருந்தன்மை யாருக்கும் வராது என்று சொல்கிறார்.

காதலிப்பது, பிறகு காதலை நிராகரிப்பது என்பது திரையுலகில் புதிய விஷயம் இல்லை. ஹன்சிகா, சிம்பு இருவரும் காதலிக்க ஆரம்பித்தது ‘வாலு’ ஷூட்டிங்கில். இன்னும் அந்தப் படம் ரிலீசாகாத நிலையில், திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர்.

வரும் 17ஆம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு பாடல் காட்சியை சிம்பு, ஹன்சிகா நடிப்பில் படமாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், ஹன்சிகா கால்ஷீட் கொடுப்பாரா என்று தயாரிப்பு மற்றும் ஹீரோ தரப்பில் சந்தேகம் வந்தது. ஆனால், தொழில் என்று வந்த பிறகு வேறு எந்த விஷயத்தையும் யோசித்துப் பார்க்கக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக உள்ள ஹன்சிகா, மீண்டும் சிம்புவுடன் இணைந்து ஆட சம்மதித்துள்ளாராம்.

- ராஜ்