ரஜினி வாரிசுகளின் மாஸ்டர்!
நூடுல்ஸ் விவகாரம் பற்றியெரியும் இந்த நேரத்தில், கோடம்பாக்கத்தில் நடமாடிக்கொண்டிருக்கிறார் ஒரு நூடுல்ஸ் தலையர். கனகராஜ் என்ற பெயரை ‘கனக்’ என்று சுருக்கிக்கொண்டு, பி.வாசுவின் உதவியாளர் மூர்த்தி கண்னன் இயக்கும் ‘சாலையோரம்’ படத்தில் நாயகனுடன் படம் முழுக்க வரும் கேரக்டர் கிடைத்திருக்கிறது இவருக்கு.
 விஜய்யின் ‘பகவதி’ படத்தில் காய்கறிக்கடைக்காரராக வேடம்போட்டு, சினிமாப்பயணத்தைத் தொடங்கிய இவருக்கு, தலைமுடித்தோற்றம்தான் அடையாளப்படுத்தி, அங்கீகாரம் வாங்கிகொடுக்கிறதாம்.
கராத்தே மாஸ்டரான கனக், ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா- சவுந்தர்யா இருவரும் சிறுமிகளாக இருந்தபோது, அவர்களுக்கு கராத்தே கற்றுக்கொடுத்திருக்கிறார். இன்னும் சில பிரபலங்களின் குழந்தைகளும் இவரது பயிற்சிப்பட்டியலில் இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யாவும் சவுந்தர்யாவும் பயிற்சி எடுக்கும்போது, அவர்களுக்குத் தெரியாமல் மறைந்திருந்து பார்த்து ரசிப்பாராம் ரஜினி.ஃபேஷன் டெக்னாலஜி படித்துள்ள இவர் வடிவமைத்ததுதான் ‘கொடைக்கானல்’ படத்தில் நாயகி பூர்ணா அணிந்த ஆடைகள். பன்முகத்திறமையுள்ள கனக், படத்துறையில் புகழ்பெறுவதையே லட்சியமாக வைத்திருக்கிறார்.
-என்
தேவி புராணம்!
‘புலி’ படத்தில் தேவியின் ரீ-என்ட்ரியை யார் ரசிக்கிறார்களோ இல்லையோ அதன் நாயகி ஹன்சிகா ரொம்பவே ரசிக்கிறாராம். தன்னை சந்திக்க வரும் சினிமா பிரபலங்களிடம் தேவி புராணம் பாடுகிறாராம்.இனியாவுக்கு தமிழ் சினிமாவில் ‘பேர்’ வாங்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். ஆனால் அவருடைய அம்மா சம்பளத்தை கன்னாபின்னாவென்று உயர்த்தி முட்டுக்கட்டை போட்டுவிடுகிறராம்.
-எஸ்
|