ரக்ஷணாவின் கெட்ட ஆட்டம்!
“பசங்களுக்கு எந்தளவுக்கு ‘பசங்க’ படத்தில் முக்கியத்துவம் இருந்ததோ அதேஅளவுக்கு அதில் அழுத்தக்கார அப்பாவாக நடித்தவர்களுக்கும் முக்கியத்துவம் இருந்திருக்கும். அதேபோல் இரு அழுத்தமான அப்பாக்களின் கதைதான் ‘காதல் காலம்’ படத்தோட ஒன் லைன்’’ என்கிறார் இயக்குனர் பாரதிசோமு என்கிற ஜி.ஏ.சோமசுந்தரா.
 இவர் பாக்யராஜிடம் சினிமா கற்றவர். நாயகன் சந்துரு. நித்யா ஷெட்டி, சார்வி செக்குரி நாயகிகள். ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள், யானைகள், சிறுத்தைகள் என வன விலங்குகள் நடமாடும் பகுதியில் உயிர் பயத்தோடுதான் படப்பிடிப்பை நடத்தினார்களாம்.
30 ஏக்கர் பரப்பளவுள்ள கரும்புப் பயிர் தோட்டத்தில் 2 ஏக்கர் கரும்புப் பயிர்களை வெட்டி ஒரு குத்துப்பாடலைப் படமாக்கினார்களாம். அந்தப் பாடல் காட்சியை ரசிகர்களுக்குத் தெரியாமல் படமாக்க நினைத்திருந்தார்களாம். ஆனால் எப்படியோ ரசிகர் ‘ஸ்மெல்’ பண்ணியதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விட்டதாம். ஏன் இவ்வளவு கூட்டம்? அத்தனைக்கும் காரணம் ரக்ஷணா மெளரியாவின் கெட்ட ஆட்டம்தான்!
|