அஜித் ரசிகை!



தமிழ்ப்பட உலகில் வளர்ந்து வரும் நிலையில், திடீரென்று அஜித் தங்கை யாக நடிக்க வேண்டிய கட்டாயம் என்ன என்று, லட்சுமி மேனனைப் பார்ப்பவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்களாம்.

‘படத்தின் கதைப்படி தங்கை கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. மேலும், நான் அஜித்தின் தீவிர ரசிகை. அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும், சந்தோஷமாக ஒப்புக்கொண்டு நடிக்கிறேன். இதில் மற்றவர்களுக்கு என்ன வருத்தம்? படம் ரிலீசான பிறகு சொல்வார் கள் பாருங்கள், என்னுடைய செலக் ஷன் சரிதான் என்று’ என்கிறார்.

 தேவா