‘பாம்பே வெல்வட்’ பட விமர்சனம் காரணமாக அந்தப்பட டைரக்டர் அனுராக், ராம்கோபால் வர்மா இடையே சண்டை ஏற்பட்டது. இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் கரண் ஜோஹர்.மாதவன், கங்கனா நடித்துள்ள ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ அமர்க்கள ஓப்பனிங் பெற்றுள்ளது. கங்கனாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிகிறது.

மகள் ஜான்வியை சல்மான் கான் படத்தில் அறிமுகப்படுத்த போராடி வருகிறார் தேவி. ஆனால் தேவியைப் பார்த்தாலே சல்லு பாய் நழுவி விடுகிறாராம்.திருமணமாகி 2 வருடமாகிவிட்டது. குழந்தை எப்போது எனக் கேட்டாலே மீடியா மீது ஆவேசப்பட்டு பதில் தருகிறார் கரீனா கபூர்.ஷூட்டிங்கில் ஷாருக்கானுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
ஜாக்கி ஷெராப்பின் மகன் டைகர் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாகிறார் ஷ்ரத்தா கபூர்.‘பீக்கு’ ஹிட்டானதால் தனது சம்பளத்தில் ரூ.50 லட்சத்தை ஏற்றியுள்ளார் தீபிகா படுகோன்.டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி, பிரியங்கா சோப்ராவை இணைத்து பாலிவுட்டில் கிசுகிசு கிளம்பியுள்ளது.‘திரிஷ்யம் ரீமேக்கில் மோகன்லால் அளவுக்கு என்னால் நடிக்க முடியுமா தெரியாது’ என அடக்கத்துடன் சொல்கிறார் அஜய் தேவ்கன்.
ஜியா