இருவர் ஓன்றானால்



கல்லூரி மாணவனான பிரபுவை இளம் பெண்கள் துரத்தித் துரத்திக் காதலிக்கிறார்கள். ஆனால் அவர் அந்த அப்ரோச்சை ஃப்ரெண்ட்ஷிப்பாக நினைத்து ஒதுக்கிவிடுகிறார். அந்த சமயத்தில் தற்செயலாக நாயகி கிருத்திகா மாலினியை சந்திக்கிறார். முன்பு தன்னை துரத்திய பெண்கள் போல் இப்போது நாயகியைத் துரத்துகிறார் பிரபு. காதல் காயா? பழமா? என்பது க்ளைமாக்ஸ்.

புதுமுகம் பிரபு முதல் படத்திலேயே பாஸ் மார்க் வாங்குகிறார். ‘காதல்’ படத்தில் பரத்திடம் இருந்த அதே துள்ளலை இவரிடமும் பார்க்க முடிகிறது. இயக்குனர்களின் கண்களில் தொடர்ந்து பட்டால் வாய்ப்பு நிச்சயம்.

கிருத்திகா மாலினி பக்கத்துவீட்டு தோழியை நினைவுபடுத்தும் எளிமையான அழகி. வாய் திறந்து பேசாமல் கண்களால் பேசியே ரசிகர்களை மயக்குகிறார். குரு கிருஷ்ணன் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் ‘நச்’. குமார் தரின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான விறுவிறுப்பை வழங்கியிருக்கிறது. பேய்ப் படங்களுக்கு மத்தியில் மனதுக்கு ரம்மியமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அன்பு.ஜி.