வருண் மணியனுடன் ஏற்பட்ட திருமண நிச்சயதார்த்தம் திடீரென்று நின்று விட்டது குறித்து, எள் முனையளவு கூட வருத்தப்படவில்லையாம் திரிஷா. எப்போதும் போல் பார்ட்டிக்குச் செல்வது, ஃப்ரெண்டு களுடன் ஊர் சுற்று வது, ஷூட்டிங்கில் அரட்டையடிப்பது, வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி கலாய்ப்பது, ட்விட் செய்வது என்று ஜாலியாக இருக்கிறாராம்.

காரணம், தனது தாய் உமா கிருஷ்ணன் கொடுத்த தைரியமும், தன்னம்பிக்கையும் என்கிறார். தற்போது திருமணம் பற்றி யோசிக்க நேரமின்றி தமிழில் ‘பூலோகம்’, ‘அப்பாடக்கர்’, ‘தூங்காவனம்’, ‘போகி’, ‘அரண்மனை 2’ படங்களில் நடிக்கும் அவர், மீண்டும் தன் பால்ய நண்பரும், தெலுங்கு நடிகருமான ராணா டகுபதியுடன் நட்பைப் புதுப்பித்துள்ளார்.
ராஜ்