கிளாமராக நடிப்பது பற்றி ஆளாளுக்கு ஒரு கதை சொல்கிறார்கள். இதோ காஜல் அகர்வால் தன் பங்குக்கு ஒரு கதை விடுகிறார். ‘கிளாமராக நடிப்பது ஏதோ பெரிய குற்றம் என்பது போல் நினைக்கிறார்கள். ரசிகர்கள் விரும்புகிறார்கள், நாங்கள் கிளாமராக நடிக்கிறோம்.

பிறகு ஏன் அதை பெரிதுபடுத்திப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. இதுவரை நான் நடித்த படங்களைப் பார்த்தால், கிளாமருக்கு மட்டும் தனியாக முக்கியத்துவம் கொடுத்திருக்கமாட்டேன். தமிழில் ரிலீசாகும் ‘மாரி’, ‘பாயும் புலி’ படங்களைப் பார்க்கும்போது, ரசிகர்கள் என்மீது வைத்துள்ள மரியாதை அதிகரிக்கும்’ என்கிறார்.
தமிழ், தெலுங்கில் ‘போகி’, தமிழில் ‘144’ மற்றும் குஷ்பு தயாரிப்பில் வைபவ் ஜோடியாக ஒரு படம், கன்னடத்தில் ‘மஞ்சப்பை’ ரீமேக் என, கைவசம் நான்கு படங்கள் வைத்திருக்கும் ஓவியா, ஏனோ ‘சீனி’ படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.
இந்நிலையில், சினிமாவில் ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார். ‘எந்த மொழிப் படத்தை எடுத்துக்கொண்டாலும், ஹீரோவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த நிலை உடனே மாற வேண்டும். எங்களைப் போன்ற ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்’ என்று ஆவேசமாகப் பேசுகிறார்.
தேவராஜ்