“சென்னையில் ஸ்லம் ஏரியா என்றால் குடிசைப்பகுதி என்றுதான் நினைக்கிறார்கள். உண்மை அது அல்ல. ஒரிஜினல் சென்னைவாசிக்கு என்று சில அடையாளங்கள் இருக்கின்றன. அந்த வகையில் சென்னை மக்கள் பற்றி நிறைய ஆய்வுகளை மேற்கொண்ட பிறகுதான் ‘வந்தா மல’ படத்தை இயக்கியிருக்கிறேன்’’ அசால்ட்டாக பேசுகிறார் இயக்குனர் இகோர். யெஸ்! ஆர்யாவை வைத்து ‘கலாபக் காதலன்’ படத்தை இயக்கிய அதே இகோர்தான்.

‘‘காமெடிதான் படத்தோட அடிநாதம். அதுக்குள்ள சின்ன ரொமான்ஸும் இருக்கும். நாலு பசங்க தாங்கள் செய்வது தப்புன்னும் தெரியாமல் அதுக்கு தண்டனை உண்டு என்றும் தெரியாமல் குற்றம் பண்ணுகிறார்கள். அதில் ஒரு குற்றம் அவர்களை பெரிய பிரச்னையில் கொண்டு போய் நிறுத்துகிறது. அதை அந்த பசங்க எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை சீன் பை சீன் காமெடியாக சொல்லியிருக்கிறேன். காமெடிக்காக சில லாஜிக் மீறலும் நடந்திருக்கு. அதை நீங்கதான் ஸ்கிரீன்ல பார்த்து சொல்ல வேண்டும்’’ என்கிறார் இகோர்.
தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் இதன் நாயகர்கள். நாயகி பிரியங்கா. இசைப் பணிக்காக உலகம் முழுவதும் பயணம் செய்த சாம்.டி.ராஜ் கிரியேடிவ்வாக இசையமைத்திருக்கிறாராம். அதே போல் சைக்கோ இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மகாநதி சங்கரின் கேரக்டரும் பேசப்படும் விதத்தில் வந்துள்ளதாம். இகோர் எழுதிப் பாடியுள்ள ‘உன்னாண்ட காதல நான் சொன்ன வொன்ன இன்னா நெனச்ச..’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதால் படம் கன்ஃபார்ம் ஹிட் என்கிறது படக்குழு.
எஸ்