CSK



சார்லஸ், ஷஃபிக், கார்த்திகா ஆகிய மூவர் வாழ்க்கையில் நடக்கும் திடுக்கிடும் திருப்பங்களே இந்தப்படம். இவர்களில் சார்லஸும் கார்த்திகாவும் காதலர்கள். அவர்கள் காதலில் ஒரு சிக்கல் ஏற்படுகிற அதேநாளில் ஷஃபிக்கும் ஒரு பெரிய சிக்கலில் மாட்டுகிறார்.

கடைசியில் மூவருக்கும் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது.சார்லஸாக நடித்திருக்கும் ஷரண்குமார், கார்த்திகாவாக நடித்திருக்கும் ஜெய்குஹைனி, ஷஃபிக்காக நடித்திருக்கும் மிஷால்நசீர் ஆகியோர் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வில்லன்களாக இருக்கும் விமல்ஆதித்யா, நாராயண், கிருஷ்ணா விஸ்வநாதன் ஆகியோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.    

ஷஃபிக் கடத்தல் வேலைக்குப் போக காரணம், சார்லஸ் - கார்த்திகா காதலுக்கான சிக்கல் ஆகியன எல்லாம் ஏற்கெனவே பலமுறை பார்த்தவையாக இருப்பதால் சுவாரஸ்யம் மிஸ்ஸிங். இரண்டாம் பாதி முழுக்க ஒரே வணிக வளாகத்துக்குள்ளேயே படம் நடப்பது ரசிக்கும்படி இல்லை. விஷயமே இல்லாத விஷயத்தை வைத்துக் கொண்டு ஒரு முழு நீளப் படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் சத்தியமூர்த்தி சரவணன்.