காதலை விலக்கும் இனியா!



ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே நடிக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில், சினிமா நடிகையாக வருகிறார் இனியா. ‘இதே படத்தில் நீதுசந்திரா, சுஜா வாருணி, கோமல் சர்மா, அர்ச்சனா  இருந்தாலும், எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்ததில்லை. காரணம், அவரவருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நான் யாரைப் பார்த்தும் பொறாமைப்பட மாட்டேன். எனக்கு விதிக்கப்பட்டது மட்டுமே நடக்கும் என்று நம்புகிறேன்.

நடனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். தமிழில் ‘ரெண்டாவது படம்’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படங்களில் ஒரு பாடலுக்கு ஆடினேன். இனி அப்படி ஆட மாட்டேன். ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன். என் திருமணம் பற்றிக் கேட்கிறார்கள்.

அதற்கு அவசரம் இல்லை. சினிமாவில் சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. காதல் போன்ற விஷயங்களில் இருந்து விலகி இருக்கிறேன். கேரளாவில் பி.பி.ஏ படிக்கிறேன்’ என்று, படபடக்கிறார் இனியா.

- தேவராஜ்