சஞ்சனாவின் கண்டிஷன்!



‘உளவுத்துறை’, ‘ஜனனம்’, ‘கலவரம்’ படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன், ‘வஜ்ரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஒரு பாடலுக்கு ஆடும்படி சஞ்சனா சிங்கிடம் பேசியபோது, ‘இனி நான் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடமாட்டேன். தனி ஹீரோயி னாகவோ அல்லது இரண்டு ஹீரோயின்களில் ஒருவராகவோ அல்லது கதைக்கு மிகவும் முக்கியமான ஒரு கேரக் டரிலோ மட்டுமே நடிப்பேன். அப்படிப் பட்ட வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்.

சம்பள விஷயத்தைப் பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டாராம். இதையடுத்து, ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட ராதா சம்மதித்துள்ளாராம். அய்யய்யோ, ‘அலைகள் ஓய்வதில்லை’ ராதாவா என்று அலறாதீர்கள். இந்த ராதா, ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் முரளி ஜோடியாக நடித்தவர்.