விஜயகாந்த் அண்ணன் மகன் படம்



விஜயகாந்த் அண்ணன் மகன் எம்.என்.ராஜசிம்மன் தயாரிக்கும் படம் ‘ஒரு காதல் ஒரு கல்யாணம்’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் என்.எஸ்.செல்வகுமாரன். இவர் தொல்.திருமாவளவன் நடித்த ‘மின்சாரம்’ படத்தை இயக்கியவர். கணேஷ் இதன் நாயகன். கன்னட இறக்குமதி ஜீவிகா நாயகி.

புதுமுகம் விஸ்வா வில்லன். இலங்கைத் தமிழர் அருள்தாஸ் ஒரே ஒரு சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறாராம். பாடி பில்டரான இவருடைய உடற் கட்டுக்காகவே வாய்ப்பு கிடைத்ததாம். பாடல்கள், இசை அமர், சரண்.

‘‘இது ப்யூர் லவ் சப்ஜெக்ட். இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் காதலை சொல்லியிருக்கிறேன். சின்ன பட்ஜெட் படங்களில் ஒரு நாளைக்கு நான்கைந்து சீன்கள் எடுப்பார்கள். ஆனால் நான் ஒரு நாளைக்கு ஒரு சீன்தான் எடுக்கிறேன். அதற்கு காரணம், என்னுடைய தயாரிப்பாளர் ராஜசிம்மன். தினந்தோறும் எடுத்த காட்சிகள் திருப்தி இருந்தால் மட்டுமே அடுத்த காட்சி. ஏன்னா, எனக்கும், தயாரிப்பாளருக்கும் குவாலிட்டிதான் முக்கியம்” என்கிறார் என்.எஸ்.செல்வகுமாரன்.

-எஸ்