ராத்திரி நேரத்து தன்ஷிகா!



இரவு நேர ஷூட்டிங்கில் அதிக நாட்கள் பங்கேற்ற பெருமை தன்ஷிகாவையே சேரும். ‘அவள் பெயர் தமிழரசி’ மீரா கதிரவன் அடுத்து இயக்கும் படம், ‘விழித்திரு’. விதார்த், கிருஷ்ணா, தம்பி ராமய்யா நடிக்கின்றனர். இதில் மாறுபட்ட கேரக்டரில் நடிக்கும் தன்ஷிகா, சென்னையில் நடந்த இரவு நேர ஷூட்டிங்கில் மட்டுமே பணியாற்றி இருக்கிறார். இதுபோல் எந்த ஹீரோயினும் நடித்ததில்லை என்று படக்குழுவினர் சொல்கின்றனர்.

‘காத்தாடி’, ‘திறந்திடு சீசே’, ‘கிட்ணா’ ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கும் தன்ஷிகா, ஃபேஸ்புக்கில் தன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் போஸ்ட் செய்கிறார். அவரைப் பின்பற்றி லட்சுமி மேனன், இனியா, அனுமோல், அருந்ததி, சினேகா, த்ரிஷா, ஹன்சிகா, ராய் லட்சுமி, பாவனா போன்ற ஹீரோயின்களும் தங்களைப் பற்றிய தகவல்களை ‘அப்டேட்’ செய்து வருகின்றனர்.