அஜீத் இடத்தில் பிரேம்ஜி



“சாதனை படைப்பவர்களைப் பார்த்துச் சொல்லும் வார்த்தை ‘டக்கர்’. நம்ம ஹீரோ பிரேம்ஜியும் அப்படிப்பட்டவராக தன்னை நினைக்கிறார். காமெடியாக நடிக்கும் பிரேம்ஜியின் வாழ்க்கையை ஆக்ஷனோடு கலந்து பார்த்தா எப்படியிருக்கும் என்று யோசித்தபோது வந்த கதைதான் ‘டக்கர்’ ” - காமெடியாகப் பேசுகிறார் இயக்குனர் பரணி ஜெயபால். இது ‘மதில்மேல் பூனை’ படத்துக்குப் பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம்.

‘‘பிரேம்ஜி படம் என்றதும் காமெடி தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் இந்தப் படத்தில் காமெடிதான் பிரதானமாக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி படத்துல சயின்ஸை மையமாக வைத்து கதை சொல்லியிருக்கிறேன். ஜீவா என்ற கார் பந்தய வீரராக பிரேம்ஜி வர்றார். அதுக்காக அஜீத் ரேஞ்சுக்கு நினைக்க வேண்டாம். ஏன்னா இவர் நீங்கள் நினைக்கிற மாதிரி சீரியஸ் கார் பந்தய வீரர் அல்ல.

சிரிப்பு கார் பந்தய வீரர். கதாநாயகி மீனாட்சி தீக்ஷித்துக்கு வழக்கமான கதாநாயகி கேரக்டரை விட கனமான கேரக்டர். அதேபோல் அருந்ததிக்கும் கனமான கேரக்டர். மெயின் வில்லனாக யோகி ஜேபி வர்றார். இன்னொரு வில்லனாக ‘பாண்டிய நாடு’ சரத் வர்றார். இவர்களோடு வி.டி.வி.கணேஷ், வெங்கட் பிரபு, கங்கை அமரன் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.”

பிரேம்ஜிக்கு காமெடி பண்ணத் தெரியும். மியூசிக்கில் எப்படி?

பிரேம்ஜியின் நடிப்பு பெஸ்ட்டா, மியூசிக் பெஸ்ட்டா என்று பொதுவாகக் கேட்டால் நான் மியூசிக்தான் என்று சொல்வேன். ஏன்னா, அந்தளவுக்கு பிரேம்ஜியிடம் மியூசிக் நாலெஜ் இருக்கிறது. எப்போதோ மியூசிக் டைரக்டராக வந்திருக்க வேண்டியவர்... ரொம்ப லேட்டாக வந்திருக்கிறார். அவர் போட்டிருக்கும் ஐந்து பாடல்களும் டாப் டக்கராக வந்திருக்கிறது. சீக்கிரத்தில் உங்க காதுகளுக்கு வந்து சேரும்” என்கிறார் இயக்குனர் பரணி ஜெயபால்.

-எஸ்