‘எங்கேயும் காதல்’ படத்தைப் பத்தி அசத்தலாக வெளியிட்டு அசத்திட்டீங்க சார்...! வெள்ளித்திரையில் காண ஆர்வம் ஏற்படுத்தி விட்டது.
எஸ்.பெரியசாமி, புதுச்சேரி.
தனுஷ் நடிக்கும் ‘வேங்கை’ படத்தோட டைரக்டர் ஹரியின் பேட்டி படிக்க ரம்மியமாக இருந்ததுங்கோ...!
வீ.மூர்த்தி,திருப்பூர்.
அட்டையிலையும் நடுப்பக்கத்துலயும் ஹன்சிகா மோத்வானியோட கிறங்க வைக்கிற போட்டோவை போட்டு பார்க்கிறவங்களை கிறங்க வச்சுப்புட்ட வாத்தியாரே...!
பி.சி.குப்புசாமி,சென்னை-99.
அதிகமாக கவர்ச்சி காட்டி நடிக்கும் நடிகை என்ற பெயரை அழிப்பது தான் ஸ்ரேயாவின் முக்கிய வேலைன்னு படிச்சு அதிர்ச்சி ஆயிட்டேன். ஏன் அம்மணி இப்படி முடிவு எடுத்திருக்காங்க?
நெ.மூர்த்தி,கோவை