“கடவுள் எப்பொழுதாவது மனித ரூபத்தில் அவதரித்து உதவுவான் என்பது சேரி மக்களின் நம்பிக்கை. அப்படி ஒருவன் தெருப்பாடகனாக சேரி மக்களிடம் அறிமுகமாகிறான். சேரி மக்களின் அன்பை பெற்ற அவன் அந்த மக்களுக்காக குரல் கொடுக்கிறான். சேரியில் வாழும் சிறுவர், சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் சமூக விரோதிகளை எதிர்க்கிறான்.
அதனால் ஏற்படும் விளைவுகளை அவன் எப்படி சந்திக்கிறான் என்பதை காதல், ஆக்ஷன், காமெடி கலந்து மகாவிஷ்ணு கிரியேஷன்ஸ் வழங்கும் பயனியர் மூவிஸ் சார்பில் சங்கரராமன், சசீதரன் தயாரிக்கும் ‘தூதுவன்’ படத்தில் சொல்லியிருக்கிறேன் இந்தப் படத்தில் நாயகனாக புதுமுகம் அலன் நடிக்கிறார். நாயகியாக அர்ச்சனா நடிக்கிறார்கள்’’ என்கிறார் இயக்குனர் மோகன் க்ரூப்.
எஸ்