ஒரு ஊர்ல ஒரு கல்லூரி, அந்த கல்லூரி மாணவனுக்கும், மாணவிக்கும் காதல் என்று கதை ஆரம்பித்தாலும் வித்தியாசமான முடிவைச் சொல்லும் படம்.
கல்லூரி மாணவன் வேடத்தில் நடிக்கும் விஷ்ணுபிரியன் ஆடல், பாடல், சண்டை என சகல திறமைகளையும் ‘வெரிகுட்’ போடுமளவுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.மதுமிதாவுக்கு வசனக் காட்சிகளை விட பாடல் காட்சிகள்தான் அதிகம் என்பதால் வாய்ப்பைப் பயன்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.
கஞ்சா கருப்புவின் காமெடி கடி ரகம் இல்லாததால் ரசிக்க முடிகிறது. முர்ஷாக் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசையில்தான் டென்ஷன் பண்ணுகிறார்.
காதல் படத்தில் கருத்து சொல்லியிருக்கும் ரவி ஆச்சர்யாவுக்கு ‘பாஸ்’ மார்க் போடலாம்.