ஷங்கருக்கு பிடித்த காமெடியன்




Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



           ‘ராணா’ படத்தில் தீபிகா படுகோனின் உடைகளை நீதா லுலா வடிவமைக்கிறார். இவர் ‘ஜோத அக்பர்’ படத்துக்காக ஐஸ்வர்யா ராய்க்கு உடைகளை வடிவமைத்தவர்.

வி.எம். நிறுவனம் தயாரிக்கும் விதார்த் நடிக்கும் படம் ‘முதல் இடம்’. இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியை கர்நாடகாவில் படமாக்கியுள்ளார்கள்.

பொது இடங்களில் தன் அப்பா ஆர்.பி.சௌத்ரியை ‘சார்’ என்று அழைக்கிறார் ஜீவா.

‘நண்பன்’ படத்தில் மெயின் காமெடியனாக சத்யன் நடிக்கிறார். இவருடைய காமெடியை படப்பிடிப்பு தளத்தில் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாராம் இயக்குனர் ஷங்கர்.

‘பையா’ படத்தை கன்னடத்தில் இயக்குகிறார் பிரபு சாலமோன். இந்தப் படம் முடிந்த பிறகு தமிழில் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

வர்ச்சி வேடங்களை மறுப்பதால் இருபதுக்கும் மேற்பட்ட பட வாய்ப்புகளை இழந்துள்ளாராம் ‘நாடோடிகள்’ அனன்யா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் இயக்குகிறார் ‘ஊமை விழிகள்’ ஆபாவாணன்.

‘ரௌத்ரம்’ படம் மட்டும் கைவசம் வைத்துள்ள ஸ்ரேயாவுக்கு தமிழில் வாய்ப்பு இல்லாததால் பாலிவுட்டில் முழு கவனம் செலுத்தியுள்ளார்.

‘திருத்தணி’ படத்தில் முன் எப்போதும் இல்லாத  அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் சுனேனா.

ம்பி கார்த்தியிடம் குடும்ப வாழ்க்கைக்குரிய டிப்ஸ் நிறைய கொடுத்துள்ளாராம் அண்ணன் சூர்யா.
எஸ்