நண்பன்’ படத்தின் காட்சிக்கான வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி மனப் பாடம் செய்து கொண்டு நடிக்கிறாராம் இலியானா.
வித விதமான வாசகங்கள் கொண்ட டி-ஷர்ட்டை தேடிப் பிடித்து வாங்குவாராம்
சிம்பு.
‘மங்காத்தா’ படம் வெளியான பிறகுதான் புதுப்படங்களை ஒப்புக் கொள்ள உள்ளாராம் அஞ்சலி.
தெலுங்கில் அஜீத் மைத்துனர் ரிச்சர்ட்டுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்
சந்தியா.
‘விக்ரமின் தெய்வத் திருமகன்’ பாடல் வெளியீட்டு விழாவில் கோட்- சூட் அணிந்து விழாவில் கலந்து கொண்டார் நா.முத்துக்குமார். திருமணத்துக்குப் பிறகு அந்த விழாவுக்குத்தான் கோட்-சூட் அணிந்து வந்தாராம்.
மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் தூய தமிழில் பேசுகிறார் ராதா மகள்
கார்த்திகா.
“ரஜினி நடித்த
‘எந்திரன்’ படத்தை தவிர வேறு எந்த படத்தையும் இதுவரை பார்த்ததில்லை’’ என்கிறார் தீபிகா படுகோனே.
‘வேங்கை’ படத்தில் தமன்னாவின் நடிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக இருக்கும்’’ என்று புகழ் மாலை சூட்டுகிறார் இயக்குனர் ஹரி.
‘காதலுக்கு மரண மில்லை’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படங்களில் ஹீரோவாக நடித்த தேஜ் நடிக்கும் படம்
‘காந்தம்’. நியூ மூன் ஸ்டுடியோஸ் சார்பில் சஞ்சய் கணேஷ், வினோத் தயாரிக்கும் இதில் நாயகியாக ரட்சணா நடிக்கிறார். ‘‘ஒரு லட்சியத்தை அடைய காதல் வேண்டும். ஒரு காதலை அடைய இலட்சியம் வேண்டும் என்ற கருத்தை இன்றைய இளைஞர்களின் கண்ணோட்டத்தில் கதை சொல்லியுள்ளேன்’’ என்கிறார் இயக்குனர் ஷரவணன்.
‘பட்டா பட்டி 50&50’, ‘பாரி’, ‘தலைவாசல்’, ‘முத்து நகரம்’, ‘நகர்புறம்’, ‘விரைவு பேருந்து’, ‘மாயவனின் காதல்’ ஆகிய படங்களில் பாடல் எழுதியிருப்பவர் ஜெயமுரசு.எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்துள்ள இவரை கோலிவுட் இயக்குனர்கள் தட்டிக் கழிக்காமல் பாடல்கள் கொடுத்து உற்சாகப்படுத்து கிறார்களாம். இவர் எழுதிய
‘நிலா தோப்பு’ கவிதை தொகுப் புக்கு வைரமுத்து வாழ்த்துரை வழங்கியுள்ளார்.
இயக்குனர்
கே.வி. ஆனந்த் தன்னுடைய அலுவலகத்தை கார்ப்பரேட் கம்பெனி போல் மாடர்னாக வடிவமைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த பிறகுதான் புதுப்படங்களுக்கு கால்ஷீட் தருவாராம்
லஷ்மிராய்.
எஸ்