“கோபி செட்டிபாளையத்தில் பிறந்த நான் ‘எந்திரன்’ படத்துக்காக வசி, சிட்டி ஓவியங்களை வரைந்து என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்’’ என்கிறார் கலை இயக்குனர் ஷண்முகம். அவரிடம் ஒரு பேட்டி.
உங்களைப்பற்றி?‘‘பி.எப்.ஏ படிக்கும் போது துபாயில் ‘குளோபல் விலேஜ் எக்ஸ்போ’ விழாவுக்காக தாஜ்மஹால், குதுப்மினார், அஜந்தா எல்லோரா குகை போன்ற பல சின்னங்களை மேடையில் கொண்டு வந்தேன். பிறகு நண்பர்கள் சொன்ன ஆலோசனையின் படி சினிமாவில் வாய்ப்புத் தேட சென்னை வந்தேன்.
முதலில் போய் நின்ற இடம் சாபு சிரில் வீடு. அவரிடம் ‘தமிழன்’, ‘சிட்டிசன்’, ‘பஞ்ச தந்திரம்’ உள்பட பல படங்களிலும், பிரபாகரனிடம் ‘அன்பே சிவம்’, ‘திருப்பாச்சி’, ‘விருமாண்டி’, ‘தசாவதாரம்’, ‘பிதாமகன்’ உள்பட பல படங்களிலும் பணியாற்றினேன். ஓவியம் எனக்கு கை வந்த கலை என்பதால் என் குருநாதர்கள் ஓவியம் சார்ந்த மிக முக்கியமான வேலைகளை என்னிடம் கொடுப்பார்கள். ‘
அன்பே சிவம்’ படத்தில் கமலின் மாறுபட்ட உருவங்கள், ‘கந்தசாமி’ படத்தில் சேவல் முகம் கொண்ட விக்ரம் என்று பல டிசைன்கள் உருவாக்கியுள்ளேன்.
உலகளவில் பெரும் புகழும் வெற்றியும் பெற்ற ‘எந்திரன்’ படத்துக்காக சாபுசிரில் அழைத்து ரஜினிக்காக சில வித்தியாசமான டிசைன்களை வரைந்து கொடுக்க சொன்னார். மிகவும் சவாலான அந்த டிசைன்களை ஒரே இரவில் வரைந்து கொடுத்தேன்.
உங்களுக்கு முதல் படம்?‘சாப்டர் 6’, தொடர்ந்து ‘கச்சேரி ஆரம்பம்’, ‘நெல்லு’, ‘மன்மதன் அம்பு’ படங்களில் நல்ல பெயர் கிடைத்தது. தற்போது ரவி பெருமாள் இயக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்துக்காக மும்பை ரயில் நிலையத்தை ‘செட்’ அமைக்கவுள்ளேன் என்கிறார் ஷண்முகம்.
எஸ்